ஒழுக்கமற்ற நடவடிக்கையால் பிரபல நடிகைக்கு முழுமையான தடை

169

நைஜீரியாவின் பிரபல நடிகைக்கு ஒழுக்கமற்ற நடவடிக்கையால் ஹௌசா மொழி திரைப்பட துறை தடை விதித்துள்ளது.

ஹௌசா மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நைஜீரியா, நிஜேர், கானா, கேமரூன் ஆகிய நாடுகளிலும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்களிடமும் மிகவும் பிரபலமாகவுள்ளது.

இந்நிலையில், கேனிவுட்டின் (ஹௌசா திரைப்படத்துறை) பிரபல நடிகையான ரஹாமா சாடோ சமீபத்தில் வெளியாகிய இசைக் கானொளி ஒன்றில் பாடகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ளவாறு நடித்துள்ளார். இது மிகவும் ஒழுக்கமற்றதாகும் என நைஜீரிய திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.

625-0-560-320-500-400-194-800-668-160-90

இது குறித்து திரைப்பட துறை கூறியதாவது, ஹௌசா திரைப்படத்துறை பழமைவாத முஸ்லிம் மதகுருமார்களால் விமர்சிக்கப்படுகிறது, இதனால் பொதுவெளியில் இருபாலாரும் கைகளை பற்றிக்கொள்வது அல்லது முத்தமிடுவது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த நடிகை இவ்வாறு நெருக்கமாக நடித்தது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. இது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் குறித்த நடிகை எந்த கருத்தும் தெரிவிக்காததால் இப்போது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையுமென தயாரிப்பாளர் சம்மேளனம் கூறியுள்ளது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1

SHARE