கடற்படையினரிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட்

197
காலி துறைமுகத்தில் தரித்திருந்த அவன்கார்ட் ஆயுதக்களஞ்சிய கப்பலை கையேற்றமை சட்டவிரோதம் என்று கூறி அதற்காக 2பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரி கடற்படையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவன்கார்ட் தரப்பு சட்டத்தரணி நிஸான் பிரேமதிரட்ன தெரிவித்துள்ளார்.

கடற்படையின் இந்த செயற்பாடு அவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான உடன்பாட்டை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த கப்பலை கடற்படையினர் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று கையேற்றனர்.

அவன்கார்ட் நிறுவனத்துக்கும் ரக்னா லங்காவுக்கும் இடையிலான உடன்பாடு 2019 வரையில் உள்ளபோது கடற்படையினர் இந்த கப்பலை கையேற்றது சட்டத்துக்கு புறம்பானது என்று சட்டத்தரணி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

shipp

SHARE