கடலில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது

23

 

வெற்றிலைக்கேணி கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை கடற்படையினர் கைது செய்ததுடன் மூன்று டிங்கிபடகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத கடற்றொழில்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் 22 வயது முதல் 49 வயது வரையிலானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரோந்து நடவடிக்கைகளின் போது, ​​கடற்படையினர் 03 சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை இடைமறித்து, சோதனையிட்டபோது சட்டவிரோத இரவு டைவிங்கில் ஈடுபட்ட 3படகில் இருந்த 09 பேரையும் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் டைவிங் தொழிலில் ஈடுபட்ட வேளை பயன்படுத்திய மூன்று டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதுசெய்யப்பட்ட 09 சந்தேக நபர்களும் அவர்கள் பயன்படுத்திய 03 டிங்கி படகுகள் மற்றும் உபகரணங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

SHARE