கடைசி கட்டத்தில் புனேவுக்கு இப்படி ஒரு நிலைமையா? பிளே ஆப் சுற்றில் மும்பைக்கு அதிர்ஷ்டம்

166

புனே அணியைச் சேர்ந்தவரும், இங்கிலாந்து வீரருமான பென்ஸ்டோக்ஸ் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் 10-வது ஐபிஎல் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, அதாவது பிளே ஆப் சுற்று நடைபெற உள்ளது.

அதன் படி இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை மற்றும் புனே அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி பெங்களூரில் 19-ஆம் திகதி நடைபெறும் குவாலிபையர்-2(ஹைதராபத்-கொல்கத்தா) ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத வேண்டும். அதில் வெல்லும் அணி, இறுதி போட்டிக்கு வரும்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வீரர்களை அயர்லாந்து டெஸ்டில் ஆட அழைத்துள்ளதால் புனே அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் அங்கு சென்றுவிட்டார்.

முக்கியமான இனிவரும் போட்டிகளில் புனேக்காக ஸ்டோக்ஸ் ஆட முடியாது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.14.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் பென் ஸ்டோக்ஸ்.

இந்த தொடரில் முக்கியமான கட்டத்தில் சதம் விளாசி தனது அணியை வெற்றிபெறச் செய்தார். பந்து வீச்சும் குறை சொல்லாத முடியாத அளவுக்கு இருந்தது.

இப்படி ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை கடைசி கட்டத்தில் புனே அணி இழப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் புனே அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்த பென் ஸ்டோக்ஸ் இல்லாததது மும்பை அணிக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது.

SHARE