கணனி வைரஸ் ஏற்படுத்திய மின்தடை – 80 ஆயிரம் பேர் இருளில் தவிப்பு

245
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் புகுந்து ஏற்படுத்திய மின்தடையால் 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர்.மேற்கு உக்ரைனில் கடந்த மாதம் திடீரென்று அங்குள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் ஒன்று தாக்குதல நடத்தி 6 மணிநேரம் வரை மின்சார வினியோகத்தை நிறுத்தியுள்ளனர்.

மின் வினியோகம் தடை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க முடியாதவாறு வாடிக்கையாளர் உதவி மையத்தையும் ஹேக்கர்கள் முடக்கினர்.

இதையடுத்து, சில மணிநேரங்களுக்கு பின்னர் கணினி உதவி அல்லாமல் வழக்கமான சாதாரண முறையில் மின் வினியோகம் சரிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வரும் 18-ஆம் திகதிக்குள் விசாரணை நடத்தி மின்தடையை ஏற்படுத்திய ஹேக்கர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டது உக்ரைன் மின்சார துறை.

இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த Sandworm என்ற ஹேக்கர்கள் குழு இந்த மின்தடையை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்துள்ளது.

எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை மின்சார துறையில் கொண்டு வர வேண்டும் என உக்ரைன் அரசு தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளது.

Circuite தடைகளை அகற்றி மின்சார வினியோகத்தை கணினி வைரஸ் மூலமாக தாக்குதல் நடத்தி மின்தடையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது.

இச்சம்பவத்தினால், சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 6 மணி நேரம் இருளில் தவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE