கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் பாய்ந்த கார் – பரிதாபமாக பலியான நண்பர்கள்

238
கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஆற்றுக்குள் தலைகிழாக விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த நண்பர்கர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Chilliwack என்ற நகரில் Connor Dash (18) மற்றும் Gerritt Niessen (18) என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இருவரும் வெளியில் சென்றுவிட்டு கார் ஒன்றில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்பகுதி முழுவதும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலை நெடுகிலும் பனி படர்ந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே சாலையில் பயணமான நண்பர்களின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சறுக்குக்கொண்டு அருகில் உள்ள Fraser என்ற ஆற்றுக்குள் தலைகீழாக பாய்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக அந்த ஆற்றுக்கு வந்து சேர்ந்தனர்.

எனினும், மோசமான காலநிலையால் அவர்களால் வேகமாக மீட்பு பணியில் ஈடுப்பட முடியவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட நேரம் போராடிய மீட்பு குழுவினர் இறுதியாக தலைகீழாக கிடந்த காரை இரும்பு கம்பியால் கட்டி மேலே கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக காருக்குள் சிக்கி இருந்த இரண்டு நண்பர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

வாலிபர்கள் உயிரிழந்த சம்பவத்தை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்தபோது, உயிரிழந்த இருவரில் ஒருவரான Connor Dash என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் அவரது பிறந்த நாளை கொண்டாடியதாக தெரியவந்துள்ளது.

நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் இருவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE