கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்

149

கனடாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இரு மர்மநபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

Mississauga பகுதியில் உள்ள இந்தியன் உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நபர்கள் வழங்கி சென்ற பொருள் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இதுவோரு தீவிரவாத தாக்குதல் அல்லவென Peel மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி Jennifer Evans  செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தேக நபர்களும் Bombay Bhel என்ற இந்திய உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் பொருள் ஒன்றை வழங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு சந்தேக நபர்களும் கறுப்பு நிறத்திலான ஆடை அணிந்திருந்தனர். ஒருவர் கறுப்பு துணியால் தனது முகத்தை மறைந்திருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிறந்த நாள் விருந்து உட்பட இரண்டு விருந்துகள் அந்த உணவகத்தில் இடம்பெற்றுள்ளன.

யாரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய போதிலும் 3 பேர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய உணவகத்தில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அங்கு தமிழர்களும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

SHARE