கனடாவில் முதன் முறையாக உறுதி செய்யப்பட்ட குரங்கு அம்மை:

118

 

கனடாவின் கியூபெக்கில் குரங்கு அம்மை தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை முதன் முறையாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 பேர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறை, பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருப்பவர்களிக்கே பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் விளக்கமளித்துள்ளனர்.

இதனிடையே, 17 பேர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பில் விசாரித்து வருவதாக, மாண்ட்ரீல் பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

SHARE