கருணா,பிள்ளையான் கட்டுப்பாட்டில் இருந்த மன்னப்பிட்டிய இராணுவ முகாமில் எக்னெலிகொட கொல்லப்பட்டிருக்கலாம்!

214
2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு சடலம் திருகோணமலைக்கு அப்பாலுக்கு கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஐடியினர் இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்னெலிகொட மன்னம்பிட்டிய சொரவில இராணுவ முகாமில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், எக்னெலிகொட முதலில் சொரவிலையில் புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை அவர் முன்னதாக இராணுவ புலனாய்வின் இரண்டு உறுப்பினர்களால் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டார்.

இவர்கள் இருவரும் கருணா குழுவை சேர்ந்தவர்களாவர்.

இந்தநிலையில் கருணா என்ற விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மன்னம்பிட்டிய முகாமில் வைத்தே எக்னெலிகொட கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகவல்களை அரசசார்பு பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.

SHARE