கர்ப்பிணி பெண்ணை தாக்கிய பெண் கும்பல்!

268

 

அமெரிக்காவில் பெண்கள் கும்பல் ஒன்று கர்ப்பிணி பெண் ஒருவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் New Jersey மாகாணத்தில் கர்ப்பிணி பெண், தனது தோழியுடன் காருக்கு அருகில் வந்தபோது, 5 பேர் கொண்ட பெண்கள், அப்பெண்ணை ஓட ஓட விரட்டுகின்றனர்.

காரினை சுற்றி ஓடிய அப்பெண் ஒரு கட்டத்தில் கீழே விழுகிறார், கீழே விழுந்த அந்த கர்ப்பிணி பெண் “என் குழந்தை” என்று சத்தமிட்டுக்கொண்டே, அவர்களுடன் எதிர்த்து போராடுகிறார், ஆனால் அந்த பெண் கும்பல் அப்பெண்ணின் தலையில் குத்துவிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதையடுத்து 2 மணி நேரத்திற்குள் 2,000 பேர் பார்த்துள்ளனர், மேலும் இந்த சம்பவத்திற்கு சமூகதளவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

இந்த வீடியோவை பார்வையிட்ட பொலிசார், சம்பவத்திற்கு காரணமான பெண்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

SHARE