கிளிநொச்சியில் உயர்மட்டக் கலந்துரையாடல்: சொந்தக் காணிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு சி.சிறீதரன் வேண்டுகோள்

278

 

தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் எந்த வேறுபாடுகளையும் மாற்றத்தையும் காணமுடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் புதிதாக கிராமசேவகர்கள் அரச உத்தியோகங்களில் நியமனம் பெற்ற இளம் கிராமசேவகர்கள் இராணுவத்தால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டவர்களின் விபரம் வருமாறு,

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நடராஜா காண்டீபன்

புலோப்பளை கிழக்கு பளை கணேஸ் விஜிதா

121 இரத்தினபுரம் கிளிநொச்சி செபதாஸ் விஜிதா

விவேகானந்த நகர் கிளிநொச்சி செல்வராசா ரஞ்சினி

347 ஜெயந்தி நகர் கிளிநொச்சி உதயரகுவர்மா அல்பிரட் நிலக்சி

778 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி செல்வராசா சர்மிலா

107 ஸ்கந்தபுரம் கிளிநொச்சி கே.விஜயநிர்மலா

460 11ம் யூனிற் தர்மபுரம் கிளிநொச்சி கே.குணாளினி

312 புதிய புன்னை நீராவி தர்மபுரம் கிளிநொச்சி நாகேந்திரன் அம்பிகைபாலன்

218 குமரபுரம் பரந்தன் கிளிநொச்சி யாழ்பாணத்தை சேர்ந்த சாந்தநாதன் சங்கரராஜ்

சுதுமலை தெற்கு மானிப்பாய் கோபாலசிங்கம் ஜெகஜனனி

மாலுசந்தி அல்வாய் கிழக்கு அல்வாய் பாக்கியநாதன்

ஜேம்ஸ்பொக்லர் சென்ஜேம்ஸ் லேன் இளவாலை யாழ்ப்பாணம்

மற்றும் இலண்டனின் இருந்து ஊருக்கு வந்த சிவபாலன் குருதர்சன் ஆகியவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தால் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எந்தவித்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாத இவர்கள் இராணுவத்தின் கீழுள்ள புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சிலர் கைக்குழந்தைகளின் தாய்மார் இன்னும் சிலர் அவர்களோ குடும்பங்களோ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படாதவர்கள் இதுதொடர்பாக இவர்களின் குடும்பங்கள் முன்னைநாள் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் எமது மக்கள் மத்தியில் தற்பொழுதும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருப்பதையே உணர்த்துகின்றது. தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் எந்த வேறுபாடுகளையும் மாற்றத்தையும் இந்த அரச உத்தியோத்தர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட விடயத்தில் காணமுடியவில்லை.

எமது மக்கள் இன்றும் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழுகின்ற இராணுவ கெடுபிடி நிறைந்த சூழலே காணப்படுகினறது. ஜனநாயக சூழலை நம்பி தங்கள் எதிர்காலம் கருதி கற்று தேர்வுகளில் தோற்றி இந்த நாட்டில் ஒரு அரச உத்தியோகத்தில் இணைந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கே இந்த நிலைமை என்றால் மிகவும் கவலை தருகின்ற சூழல் தான் தற்பொழுதும் நிலவுகின்றது என்பதையே உணரமுடிகின்றது.
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீள்குடியேற்றம் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. சிறையில் உள்ள கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மாறாக புதிதாக கைதுகள் நடைபெறுகின்றன. சிறைகள் தமிழ் இளைஞர் யுவதிகளால் நிரப்பப்படுகின்றன. மக்கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய எதிர்கால நம்பிக்கை இன்மையுடனேயே வாழ வேண்டிய இருள் சூழ்ந்த நிலையே காணப்படுகின்றது.

நல்லாட்சி என சொல்லுகின்ற இந்த அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த செய்த ஆட்சியையே தமிழர்களுக்கு கொடுக்க நினைத்தால் அது வேறுவிதமான விளைவுகளையே எதிர்காலத்தில் தரும் எனக்குறிப்பிட்டதுடன்.

கைதுகள் நிறுத்தப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பப்படவேண்டுமென்பதுடன் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு போருக்கு பிந்தியதான அச்சம் நிறைந்த சூழல் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உயர்மட்டக் கலந்துரையாடல்: சொந்தக் காணிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு சி.சிறீதரன் வேண்டுகோள்

கடந்த வாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின் வடக்கில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதென்று தீர்மானித்ததன்படி, இன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.டி.பியின் முன்னைய நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

கரைச்சி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலர்கள், இராணுவம் கடற்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள், கண்ணிவெடியகற்றும் பிரவுகளின் உயர்மட்ட அதிகாரிகள், அரச செயலக உயர்மட்ட அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

இராணுவம் மற்றும் கடற்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான  காணிகள் அடங்கிய பரவிப்பாஞ்சான், இரணைதீவு போன்ற கிராமங்களை விரைவாக உரித்துடைய மக்களுக்கு வழங்க ஆவனம் செய்ய வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் நாதன் திட்டம் உழவனூர், புன்னைநீராவி போன்ற கிராமங்களின் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்கள் வீட்டுத்திட்டங்களை பெற ஆவன செய்யவேண்டுமனவும் மேலும் கேட்டுக்கொண்டார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிவபுரம் உள்ளிட்ட காணிகளை மக்களுக்கு சட்டபூர்வமாக உரித்துடையதாக்குவதற்கு சட்டத்தின் ஊடான வழிமுறைகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தனுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

மேலும் கண்ணிவெடியகற்றும் பிரிவால் செய்யப்படவேண்டிய வேலைகள் மற்றும் கண்ணிவெடியகற்றும் பிரிவில் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

SHARE