கூட்டமைப்பா ? யார் கூட்டமைப்பு? யாருக்கு கூட்டமைப்பு? ஏன் உருவாக்கப்பட்டது? எப்படி உருவாக்கப்பட்டது ?

165

கூட்டமைப்பா ?
யார் கூட்டமைப்பு?
யாருக்கு கூட்டமைப்பு?
ஏன் உருவாக்கப்பட்டது?
எப்படி உருவாக்கப்பட்டது ?
2004 இற்கும்2015 இற்கும் எத்தனை வருடங்கள் ?
உருவாக்கப்பட்ட நோக்கம் என்னவாயிற்று?
அந்த நோக்கம் இன்னும் அப்படியே தான் இருக்கின்றதா?
தூர நோக்குகள் எவை?
சமகால நோக்கு என்ன?
செயல்பாடுகள் எவை?
உங்களுக்கு பலம் என்ன?
பலவீனம் என்ன?
வாய்ப்பு என்ன ?
அச்சுறுத்தல் என்ன?
அடிப்படை கொள்கை என்ன?
கோட்பாடு என்ன?
ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனங்களையும் உங்கள் கொள்கையாக கொள்ள முடியுமா?
கூட்டமைப்பு ஒரு கட்சியா?
அல்லது கட்சிகளின் கூட்டா?
கூட்டத்தின் கட்சியா?
ஏன் பதிவாக வில்லை?
ஏன் ஒன்றாக முடியாதுள்ளது?
என்ன தடைகள் உள்ளன?
அல்லது யார் தடை?
உங்களுக்கு நண்பர்கள் யார்?
எதிரிகள் யார்?
நீங்கள் யார்?
ஈழமா?
ஒற்றையா?
அல்லது தொடர்ந்தும் ஒற்றை இரட்டை பிடிப்பதா?
அல்லது ஒன்றுமே இல்லையா?
புலம் பெயரிகள் ஏதும் பேச கூடாதா?
பேச மாட்டீர்களா?
நூறு டொலர் கொடுத்து உங்களோடு உணவருந்தி பிரிதல் மட்டுமே அவர்களுடன் செய்ய முடியுமா?
தமிழக மக்கள் தொடரந்தும் வாயை பொத்திக்கொண்டு தான் இருக்க வேண்டுமா?
எல்லோரும் ஒரு நேர் கோட்டுக்கு வரவே முடியாதா?
உங்கள் இராச தந்திரம் என்ன?
பொன்சேகாவை ஆதரித்ததா?
மகிந்தவை ஆதரித்ததா?
மைத்திரியிடம் நிபந்தனையற்று சரண் அடைந்ததா?
அல்லது இவை எதுவுமே இல்லையா?
எப்போது மக்கள் முன்னால் வருவதாய் உத்தேசம்?
வருகிற ஒவ்வொரு தேர்தலுக்கும் மட்டுமா?
உங்கள் மூலதனம் எம் மாவீர ர்களும் மக்களும் தானா?
விழுங்கப்படுகிற நிலங்களுக்கு உங்கள் எதிர்வினை என்ன?
வ்வுனியாவில் இடம்பெறவிருந்த உண்ணாவிரதம் என்னாச்சு?
மீண்டும் கட்டிதரவிருந்த மாவீர துயில் இல்லங்கள் எங்கே?
இனப்படுகொலை நடந்ததா என ஆராயுமளவிற்கு நீங்கள் அந்தாட்டிக்காவிலிருந்து வந்தா அரசியல் செய்கிறீர்கள்?
உங்களை யார் இயக்குவது?
இலங்கையா?
இந்திய கொள்கை வகுப்பாளர்களா?
மேற்குலக மென் தந்திரமா?
மேற்கூறிய எதுவும் இல்லையா?
அல்லது உங்களை அறியாமல் எல்லாம் நடக்குதா?
கஜேந்திரன் , கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன் எந்த அடிப்படையில் வெளியேறினர்?
அல்லது வெளியேற்றப்பட்டனர்?
அனந்தி, சிவகரன் எந்த அம்சங்களுடன் இடை நிறுத்தப்பட்டனர்?
இது சன நாயகமா?
சனநாயாக வன்முறையா?
வன்முறை சனநாயகமா?
மாகாண சபையேறி ஏற்கிறீர்களா?
ஏற்றுத்தான் சபையேறினீர்களா?
நீங்கள் கூடிய எந்தக்கூட்டத்திலும் ஏதாவது முடிவுகள் எட்டப்பட்டனவா?
முடிவுகளுடன் தான் கூட்டங்கள் கூட்டப்படுகின்றனவா?
முடிவே இல்லாமை தான் முடிவா?
ஆர் தலைவர்?
ஆர் பேச்சாளர்?
ஆளுக்கொரு பேச்சை ஆர் நம்புறது?
யாழில் ஒரு உரையா?
பின் மன்னாரில் மறு உரையா?
மட்டக்களப்பில் இன்னொரு உரையா?
சொந்த மக்களுடன் என்ன பேசினீர்கள்?
டில்லியில் வாய்திறந்தீர்களா?
வாஷிங்டனில் முணுமுணுப்பு தன்னும் காட்டினீர்களா?
ஐ நா போய் என்ன சொன்னீர்கள்?
இனியும் சனத்துக்கு என்ன சொல்ல போறீர்கள்?

தெரியாமல் தான் கேட்கிறன்
இதைப்போல நூறு கேள்வி நுனி நாக்கில
துவளுது !

நடராஜா விநோதரன்

SHARE