கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளரது கருத்து அரசாங்கத்தின் கருத்து கிடையாது– கயந்த.

240

 

கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளரது கருத்து அரசாங்கத்தின் கருத்து கிடையாது– கயந்த:

கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபககே வெளியிட்ட கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு கியைடாது என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை எச்சரிக்கவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அரசாங்கம் திட்டமிடவில்லை எனவும், அது அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையானது அவரது சொந்த கருத்துக்களாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டிருந்த கடிதம் ஊடக அமைச்சின் கடிதத்; தலைப்பின் ஊடாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சட்டத்துக்கு முரணானது!

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் இணைந்து “ஒன்றிணைந்த எதிர்க்கட்சி” என்ற பெயரில் செயற்படுவது, சட்டத்துக்கும், ஊடகத்துறையின் நெறிகளுக்கும் முரணானது என, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எதுவென தௌிவாக உள்ள நிலையில், சபாநாயகர் இது குறித்து தெரியப்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என முன்னிற்கும் கதைகளுக்கு, ஊடகங்களில் முன்னுரிமை அளிப்பது தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அறிந்தோ அறியாமலோ ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் பிரச்சாரம் செய்யும் ஊடகவியலாளர்கள் சட்டத்தின் முன் சவாலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE