கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது! உயர்மட்ட கலந்துரையாடலின் பின் சுவாமிநாதன் அறிவிப்பு

167
 

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இன்று விடுவிக்கப்படவுள்ள 180 ஏக்கர் காணிகளும் காடுகள் நிறைந்த பகுதி என தமக்கு இப்போதுதான் தெரியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 180 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்த நிலையில் குறித்த பகுதிக்கு தற்போது வருகைத்தந்துள்ளார்.

எனினும் தாம் வருகை தந்த பிறகே குறித்த பகுதிகள் காடு என்பது தெரிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சுவாமிநாதன் தற்போது உயர் இராணுவத்தினரிடம் கலந்துரையாடுவதற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் இராணுவம் விடுவிப்பதாக உறுதியளித்துள்ள காணிகள் வெறும் காடுகளே, அவை மக்கள் வாழ்வதற்கு ஏதுவான இடம் அல்ல என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையின் பின்னர்..

இராணுவத்தினரால் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதிகள் காடுகள் என்பதை நேரில் சென்று அவதானித்த அமைச்சர் சுவாமிநாதன், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் பேர்ச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இராணுவத்தினர் விடுவிப்பதாக தெரிவித்த 180 ஏக்கர் காணிகளும் காடுகள் என எனக்கு இப்போதுதான் தெரியும்.

இதனால் இந்த காணிகள் தற்போது விடுவிக்கப்படமாட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் ஐவரை கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே காணி விடுவிப்புக்கான திகதி அறிவிக்கப்படும்.” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

SHARE