கைதிகளை விடுவிக்க அரசுக்கு ஹர்த்தால் முதல் எச்சரிக்கை- கிழக்கில் ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்

233
வடகிழக்கு தமிழர் தாயகம் தழுவிய முழு கதவடைப்பு போராட்டம் கிழக்கு மாகாண நகரங்களிலும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், வங்ககிகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் துறை அலுவலங்கள், பாடசாலைகள் யாவும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதேவேளை போக்குவரத்தில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் ஈடுபடவில்லை.
 
மக்கள் நடமாட்டமற்ற நிலையில் மட்டக்களப்பு நகரம் காணப்படுகின்றது. இதேவேளை நகரத்தில் இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ மற்றும் பொலிஸ் தரப்புக்கள் உள்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றன.
வடக்கு கிழக்கின் பூரண கதவடைப்பு போராட்டம் பொதுமன்னிப் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு வழங்கும் முதல் எச்சரிக்கை என தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பகுதிகளிலும் அதன் நகரங்களில் விநியோகிகப் பட்டுள்ளன.
SHARE