கொடுக்கல் – வாங்கல் குறித்த கணக்காய்விற்காக விண்ணப்பம் கோருவதற்கு நடவடிக்கை

88

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இதுவரை 5 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கணக்காய்வு நிபுணர் ஒருவரின் தலைமையில் கணக்காய்வு குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஏல விற்பனைப் பிரிவு , கணக்காய்வுத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி என்பன இணைந்து இந்தக் கணக்காய்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.

கணக்காய்விற்காக, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களிலிருந்து மிகவும் பொருத்தமான நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டு கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சாதாரண கணக்காய்வு மூலம் வெளியிடப்படாத விடயங்களை புதிய கணக்காய்வினூடாக ​வௌிக்கொணர்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE