கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் – CHR:

256

கொள்கைகைள அமுல்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென மனித உரிமை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் விவகாரத்தில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலையீடு செய்ய நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையீடு செய்தமை, தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயின் அவசியத்தையே வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் கொள்கை வகுப்பு மற்றும் அமுல்படுத்தல்களில் தலைமையேற்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தலையீடு செய்வது பிழையான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு அரச நிறுவனங்கள் சுயாதீன தீர்மானங்களை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE