சடலங்களுடன் தங்கியிருந்த கைதிகள்! சிறைச்சாலை கொடூரம்

188

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசாங்க சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

கைதிகளை அடித்து துன்புறுத்தல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் உட்பட உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தங்கள் கண்முன்னே கைதிகளை அடித்து கொலை செய்வதை பார்த்து மனரீதியாக பாதிக்கப்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்த கைதிகளின் சடலங்களுடன் தங்கள் பொழுதை கழித்ததையும் விவரித்துள்ளனர்.

சித்ரவதை செய்யப்பட்ட 65 நபர்களின் வாக்குமூலங்களை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE