சந்திரிக்காவை சந்தித்த ஜப்பானிய முன்னாள் பிரதமர்

155

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் நடைமுறை அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தைதான் மதிப்பதாகவும், அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய முன்னாள் பிரதமர் யசுவு புகூடா மற்றும் இராஜதந்திர குழுவுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு என்பது மிக நீண்டகாலாமாக கையாளப்பட்டு வருகின்றது. இரு நாடுகளுக்கிடையிலா நட்புறவினை தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பிலும் இலங்கை அபிவிருத்தி செயற்பாடுகளில் ஜப்பானின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்தாலோசித்திருந்தோம்.

மேலும் நடைமுறை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் தான் மதிப்பதாகவும் அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார்.

அதேபோல் ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறும் அவர்களது முதலீடுகளும் பொருளாதார நகர்வுகளும் எமக்கு மிகவும் முக்கியமானது எனவும் ஆகவே அவற்றை பெற்றுக் கொடுக்குமாறும் நான் அவர்களிடம் வலியுறுத்தினேன். முன்னாள் பிரதமர் மிக நீண்டகாலமாக இலங்கை ஜப்பான் உறவு அமைப்பில் தலைவராக செயற்பட்டவர்.

ஆகவே இந்த நகர்வுகளின் மூலமாக இலங்கையில் பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் இரு நாடுகளிடையேயான நட்புறவினை பலப்படுத்துமாறும் அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன் எனவும் தெரிவித்தார்.canterka

SHARE