சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சமய தத்துவங்களுக்கேற்பவே உருவாக்க முடியும்! ஜனாதிபதி

211

 

நல்லினக்கத்திற்கான செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினணயுமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பயாகலை இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி நாட்டில்  சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை சமய தத்துவங்களுக்கேற்பவே உட்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களை அனைத்து மத தலைவர்களும் முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லும் போது இனம், சமயம் உள்ளிட்ட விடயங்கள் தடையாக இருக்க கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE