சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுத்த வியட்நாம்

262

 

சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுக்கும் வியட்நாம்

தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனாவின் செயலுக்கு வியட்நாம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் வியட்நாம் நாட்டிற்கும் கடந்த பல ஆண்டுகளாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவான ஸ்ப்ராட்லி(Spratly) அருகே சீன சட்டவிரோதமாக அமைத்துவரும் விமான தளத்தில் தனது விமானத்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.

இதற்கு வியட்நாம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வியட்நாமின் வெளியுறவு அமைச்சர் லீ ஹை பின்ஹ் கூறியதாவது, வியட்நாம் நாட்டுக்கு சொந்தமான ஸ்ப்ராட்லி தீவுக்கு அருகில் உள்ள பகுதியில் சீன அத்துமீறி விமான சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது.

இது வியட்நாமின் இறையைமை அவமதிக்கக்கூடிய செயலாகும். மேலும் இருநாடுகளுக்கும் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறுவது போன்ற செயலாகும்.

எனவே இது தொடர்பான சீன தூதரகத்திடம் கண்டன அறிக்கை தரப்பட்டுள்ளது

மேலும் இந்த செயலை மீண்டும் தொடரக்கூடாது என்றும் சீனாவிடம் எச்சரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதான தெற்கு சீன கடலுக்கு சீனா மற்றும் வியட்நாம் அல்லாமல், மலேசியா, ப்ரூனே, பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளும் உரிமைக்கூறுவது குறிப்பிடத்தக்கது

SHARE