திருமலையில்  ஆரம்பமாகிய காணாமல் போனோருக்கான மக்கள் கருத்தறியும் முதல் அமர்வு

100

(டினேஸ்)

ஜனாதிபதி செயகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வு  திருமலை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 

  

  

  

  

இவ்வமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணை முன்னெடுத்திருந்தனர் இதன் போது அமர்விற்காக சமுகமளிப்பதற்காக வருகை தந்திருந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சற்றுத் தாமதமாகவே  அமர்வு நடைபெறவிருந்த குறித்த மண்டபத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அமர்வின் போது திருமலை மாவட்டத்தில் யுத்த காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது கருத்துக்களையும் முறைப்பாடுகளையும் ஆணைக்குழுவின் ஆணையாளர் மொஹான் ஜீ பீரிஸிடம் தெரித்ததுடன் இவ்வாணைக்குழுவின் போது  சட்டத்தரணி சாலிய பீரிஸ் குழு உறுப்பினர்கள்
எஸ்.கே.லியனகே, மிராட் ரகீம், ஜெயதீபன், புன்னிய மூர்த்தி,
கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE