சவுரவ் கங்குலி! இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைத்த இளவரசர்!

217

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

1990 காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமான நிலையில் இருந்த காலத்தில், ஒரு மனிதர் அதன் தலைவிதியை மாற்றியமைக்க முடிவு செய்தார். அவர் தான் கொல்கத்தாவின் இளவரசர். தாதா என செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி.

கங்குலி, நேர்மை மற்றும் ஆக்கிரோஷத்திற்கான அடையாளம், இன்று அவரின் 44வது பிறந்த தினம். இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றியமைத்த தாதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சவுரவ் சந்திதாஸ் கங்குலி பெங்கால் டைகர் கடந்த 1972ம் ஆண்டு யூலை 8ம் திகதி பிறந்நார். இடதுகைத் துடுப்பாட்ட வீரரான கங்குலி 1991-92 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும், 1996ல் இந்திய டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார்.

உலக பந்துவீச்சாளரகள் அனைவரையும் அசர வைக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் பட்டையைக் கிளப்பினார்.

2000 முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக திகழ்ந்தார். இவர் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7213 ஓட்டங்களும், 311 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11363 ஓட்டங்களையும் குவித்தார் என்பது உலகறிந்ததே.

மைதானத்திற்கு வெளியே பந்தை விரட்டுவததில் இவர் மிக கெட்டிக்காரர். கடந்த 2008ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றார். தற்போது பெங்கால் கிரிக்கெட் ஆணையத்தின் தலைவராக திகழந்து வருகிறார்.

இந்தியாவில் விளையாட்டு துறையை மேம்படுத்த பாடுப்பட்டு வருகிறார். விரைவில் இவரின் சுயசரிதை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE