சாம்சங் போன் தான் வெடிக்குமா? வாஷிங் மெஷினும் வெடிக்கும்பகீர் சம்பவம்

191

அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷின் ஒன்று வெடித்து அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் பலத்த சத்ததுடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்து ஓடி வந்த குழந்தையின் தாய் வீட்டை சுற்றிப் பார்க்கையில் பிரபல சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங்மெசின் வெடித்துச் சிதறிக் கிடந்ததுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் உடனடியாக சாம்சங் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து சாம்சங் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2011 முதல் பல கோடி மக்கள் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் தங்கள் நிர்வாகத்தின் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற பிரச்சனைகள் சமீபத்தில் தான் தலையெடுக்க துவங்கியுள்ளது. ஆரம்பகட்டத்தில் மக்கள் இது போன்ற புகார்களை தெரிவிக்கவில்லை. தற்போது ஒன்றுக்கு பின் ஒன்றாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். இப்பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக சரி செய்யப்படும் என கூறியுள்ளார்.

தற்போது வெடித்துச் சிதறிய வாஷிங்மெஷின் விமானத்தில் கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்பட்ட சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

மேலும் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் ஒன்று அண்மையில் வெடித்து சர்ச்சையை கிளப்பியது. அதுவே இன்னும் ஓயாத நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷின் வெடித்திருப்பது சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

SHARE