சிறிசேனவின் ஐநா விஜயத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

87

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஐநாவிற்கு   விஜயம் மேற்கொள்ளும்வேளை அவரிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  அறிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி 25 ம் திகதி உரையாற்றவுள்ளார்.

இந்நிலையிலேயே அவரின்வருகையின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் சிறிசேனவும் காரணம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டவேளை தானே பதில் பாதுகாப்பு அமைச்சாராக பணியாற்றியதை  சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டனர் இவ்வாறு சரணடைந்தவர்களில் குழந்தைகளும் சிறுவர்களும் காணப்பட்டனர் அவர்கள் சரணடைந்து பத்து வருடங்களாகிவிட்ட போதிலும் இன்னமும் அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாமலுள்ளது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

SHARE