சிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் பிரான்ஸ் பிரஜைகள்!

168

சிறிலங்காவின் சுற்றுலாத்துறையில் கடந்தாண்டு கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 17 இலட்சத்து 98 ஆயிரத்திற்கு மேலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறிலங்காவுக்கு சென்றுள்ளனர். 2016ம் ஆண்டில் 18 இலட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனினும் இது முதல் காலாண்டிலேயே சாத்தியமாகியுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை இந்தியாவிலிருந்து மூன்று இலட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். கடந்தாண்டு சுமார் 55 சதவீத சுற்றுலா பயணிகள் இந்தியா, சீனா, பிரிட்டன், ஜேர்மன், மாலைதீவு, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளார். இவர்களில் 67 சதவீதமானோர் விடுமுறையை கழிப்பதற்காக சிறிலங்கா சென்றுள்ளனர்.

சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் பரந்த முதலீடுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளன. இந்த துறையில் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் மாத்திரமன்றி தனியார் துறையும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

கடந்தாண்டு சுற்றுலாதுறையின் ஊடாக சிறிலங்கா பெற்ற வருமானம் சுமார் 300 கோடி டொலரை எட்டுகிறது. இது அதற்கு முன்னைய ஆண்டில் பெறப்பட்ட வருமானத்தை விட 22 சதவீதத்தை தாண்டிய வளர்ச்சியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட அரசியல் புரட்சியினையினால் உருவான ஆட்சி மாற்றத்தினால், புலம்பெயர் நாடுகளிலுள்ள அதிகளவான தமிழர்கள் சிறிலங்காவுக்கு படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

fr

SHARE