சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நியாயமான கோரிக்கையை எமது கட்சி முழுமையாக ஆதரிக்கிறது

243

ஊடகங்களுக்கான அறிக்கை 13.10.2015
சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி திங்கள் முதல் முன்னெடுத்து வரும் உண்ணவிரதப் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். நல்இணக்கத்துடன் நல்லாட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் இன்றைய மைத்திரி – ரணில் ஆட்சியானது சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் முன்னைய ஆட்சியினர் போன்று அக்கறையின்றி இருந்து வருவதன் விளைவே மேற்படி சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமாகும். அவர்களது நியாயமான கோரிக்கையினை எமது கட்சி முழுமையாக ஆதரிக்கின்றது. அரசாங்கம் இவ்விடயத்தில் உடன் தலையிட்டு அவர்களது விடுதலைக்கான கால வரையறையை வழங்கி விடுதலைக்கு துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கட்சி வற்;புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் இலங்கையில் ஏற்கனவே தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக அரசியல் கைதிகள் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிளும்ää புனர்வாழ்வு நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை ஊடாகவும் பொது மன்னிப்பு அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வேறு உயர் நிலைகளிலும் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் தேசிய இனப்பிரச்சினை காரணமான அரசியல் கைதிகள் மட்டும் நீண்ட காலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு வருவது இனஅடிப்படையிலான பாகுபாடும் அநீதியுமாகும். இவ்வாறான நீண்ட கால அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் உறவுகளும் உடல் உளப் பாதிப்புகளுக்கு உள்ளாகி நிற்கும் அவல நிலையையும் காண முடிகிறது. அத்துடன் அவர்களது அடிப்படை மனித உரிமைகளும் மீறப்பட்டு வருவதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே இவை அனைத்தையும் கவனத்தில. கொண்டு அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சி. கா. செந்திவேல்
பொதுச் செயளாளர்.

SHARE