சென்னையில் ரொனால்டினோ! யூலை 15 முதல் புட்சல். புட்சலை விளக்கும் வீடியோ

188

625.500.560.350.160.300.053.800.748.160.70

பிரிமியர் புட்சல் கால்பந்து லீக் தொடர் யூலை 15ம் திகதி சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோத உள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இத்தொடர் யூலை 15 முதல் 24 வரை நடக்கிறது. இத்தொடரின் தூதராக இந்திய கிரிக்கெட் டெஸ்ட அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளரங்கு கால்பந்து போட்டியான புட்சலில் ஒரு அணியில் ஐந்து வீரர்கள் விளையாடுவர். தலா 20 நிமிடங்கள் கொண்டதாக நடக்கும்.

சென்னை, கோவாவில் போட்டிகள் நடக்கும் இத்தொடரின் சென்னை, மும்பை, கோல்கட்டா, கோவா, கொச்சி மற்றும் பெங்களூரு என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் ஒரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். மொத்தம் 12 போட்டிகள் முடிவில். அரையிறுதி போட்டிகள் யூலை 23ம் திகதி நடக்கும். இறுதிப்போட்டி கோவாவில் நடக்கவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்க வேல்சின் ஓய்வு பெற்ற ரியான் ஜிக்ஸ், அர்ஜென்டினா அணியின் முன்னாள் வீரர் ஹெர்னன் கிரெஸ்போ என பல சிறந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ இத்தொடரில் கோவா அணிக்காக களமிறங்க உள்ளார். இதன் மூலம் சென்னயைில் நடக்கவுள்ள போட்டிகளில் இவரின் ஆட்டத்தை காணலாம்.

SHARE