செல்போன் குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 4 முஸ்லிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

458
cellphone
செல்போன் குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 4 முஸ்லிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்து இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறுஞ்செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த குறுஞ்செய்தி, இலங்கையில் தடை செய்யப்பட்ட செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டுள்ளது.

மேற்படி குறுஞ்செய்தி முற்றிலும் பொய்யான, அடிப்படையற்ற குறுஞ் செய்தியாகும்.

குவைத்தில் இருக்கும் இலங்கையரான றிஸ்வான் என்பவர், நீர்கொழும்பில் உள்ள ஒருவருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.

இது குறித்து சந்தேக நபர்களை கைது செய்யும் முன்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தியிருந்தனர்.

அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களின் பின்னர், வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE