சேதமடைந்துள்ள நீர்தேக்கம் உடையும் வாய்ப்பு – 500,000 பேர் உயிருக்கு அச்சுறுத்தல்

225
ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தால் சேதமடைந்துள்ள மோசூல் அணை நீர்வரத்து அதிகரிப்பால் உடைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசமிருந்த ஈராக்கின் பழமையான மோசூல் அணை தொடர் உள்நாட்டு கலவரங்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையினை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஈராக் மற்றும் குர்து படைகளின் தீவிர போராட்டத்திற்கு பின்னர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், சேதமடைந்துள்ள மோசூல் அணையினை உடனடியாக பராமரிக்க வேண்டும் என கூறி அமெரிக்க அதிபர் ஒபாமா ஈராக் பிரதமர் அபாதியை வலியுறுத்தியுள்ளார்.

சேதமடைந்த நிலையில் காணப்படும் மோசூல் அணையில் நீர்மட்டம் உயர வாய்ப்புகள் இருப்பதாக கூறும் நிபுணர்கள்,

அதனால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இதனால் 5 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் எனவும் 10 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அணையை பாதுகாக்கும் பொருட்டு 450 பேர் கொண்ட சிறப்புப்படையினரை இத்தாலி பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இத்தாலியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றும் ஈராக் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

முன்னதாக மோசூல் அணை ஐ.எஸ். வசம் இருந்த போது அணையை தகர்த்து அதிக சேதத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE