சேயா சிறுமியை கொண்டயாவின் சகோதரே கொலை செய்தார்

514
கொட்டாதெனிய சேயா என்ற சிறுமியை கொண்டாய என்ற நபரின் சகோதரரே கொலை செய்துள்ளதாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மினுவன்கொட நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேயா கொலையை கொண்டயா என்பவர் மேற்கொண்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அவரது சகோதரே இந்தக்கொலையை செய்துள்ளதாகவும் அது குறித்து ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொண்டயாவின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 19ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

சேயா கொலைச் சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பு

கொட்டாதெனியா சேயா கொலைச் சந்தேக நபர்களுக்கு இன்று விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கொண்டயா என்ற நபரும் அவரது சகோதரர் சமன் ஜயலத் என்பவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்ப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரினதும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை தாமே கொலை செய்ததாக விசாரணைகளின்போது கொண்டயாவின் மூத்த சகோதரர் சமன் ஜயலத் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொண்டயாவின் மரபணு அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மரபணு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இரண்டு சந்தேக நபர்களினதும் மரபணுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE