சொல்லி அடித்த ’கில்லி’: வாசிம் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காட்டிய கோஹ்லி

270

 

அவுஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லி அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசியதன் மூலம் வாசிம் அக்ரமுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார்

பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் விராட் கோஹ்லி 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்தார்.

அப்போது போட்டி முடிந்த பின்னர் கோஹ்லியிடம், ”நீங்கள் சதத்தை தவற விட்டுவிட்டீர்கள், அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது” என்றார்.

இதற்கு பதிலளித்த கோஹ்லி ‘‘வாசிம் பாய், நான் சொல்வதை கேளுங்கள், இந்த தொடரில் நான் கண்டிப்பாக இரண்டு சதங்கள் விளாசுவேன்” என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், மெல்போர்னில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 117 ஓட்டங்கள் எடுத்தார்.

அதே போல் கான்பெர்ராவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியிலும் 106 ஓட்டங்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் வாசிம் அக்ரமுக்கு கொடுத்த வாக்குறுதியை கோஹ்லி நிறைவேற்றி காட்டியுள்ளார்.

இந்த தொடரில் கோஹ்லி 91, 59, 117 மற்றும் 106 ஓட்டங்கள் என மொத்தம் 373 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த தொடருக்கு முன்னதாக 16க்கும் கீழே இருந்த அவரது சராசரி தற்போது 93.25 ஆக உள்ளது.

மேலும், அதிவேகமாக 7000 ஓட்டங்களை கடந்தது, அதிவேகமாக 25 சதங்கள் அடித்தது போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.

SHARE