‘ஜனாதிபதி தான் என்னோட அப்பா’  பாலியல் தொழிலாளியின் மகன் பரபரப்பு தகவல்

164

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேன்னி வில்லியம்ஸ் என்ற 30 வயதான நபர் தான் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பில் கிளிண்டன் கடந்த 1984ம் ஆண்டு Arkansas மாகாண ஆளுநராக பதவி வகித்து வந்துள்ளார். அப்போது, பாலியல் தொழில் செய்து வந்த எனது தாய் பில் கிளிண்டனை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் பழக்கம் அதிகரிக்க பில் கிளிண்டனுடன் எனது தாய் உறவு கொண்டார். இதற்காக பில் கிளிண்டன் எனது தாயாருக்கு 200 டொலர் கட்டணமாக கொடுத்தார்.

இதன் பிறகு ஒரு வருடமாக இருவரும் பழக்கத்தில் இருந்தபோது எனது தாய் கர்ப்பம் அடைந்தார். இதனை பில் கிளிண்டனிடம் தெரிவித்தபோது ‘வயிற்றில் இருப்பது எனது குழந்தை இல்லை’ என பில் கிளிண்டன் மறுத்து விட்டார்.

ஆனால், பில் கிளிண்டன் தான் எனது தந்தை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 1992ம் ஆண்டு பில் கிளிண்டனின் டி.என்.ஏவை செய்தி நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்தபோது அவர் எனது தந்தை இல்லை என என்னிடம் கூறினார்கள்.

பில் கிளிண்டனை காப்பாற்ற இதுபோன்ற போலியான பரிசோதனையை அவர்கள் செய்துள்ளனர்.

பில் கிளிண்டன் தான் எனது தந்தை. இதனை நிரூபிக்க அவரது டி.என்.ஏவை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் டேன்னி வில்லியம்ஸ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE