ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

466

 

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

naara

ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கெளரவத்தை இதன்மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர் இரண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் மாத்திரமே உரையாற்றியுள்ளனர். அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோரே அவர்களாவர். இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கெளரவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிட்டவுள்ளது. அத்துடன், ஜப்பானியர்களின் மனமார்ந்த கெளரவத்துக்கு உரித்தான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்ஜெயவர்த்தனவுக்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு அளிக்கப்படும் உயர்ந்த மரியாதை, கெளரவம் பிரதமர் ரணிலுக்கு ஜப்பானில் வழங்கப்படவுள்ளது.

SHARE