ஜாதகத்தில் ராகு, கேது இருந்தால் வாழ்க்கையே மாறிவிடுமாம்.. பலரும் அறியாத உண்மைகள்!!

129

 

ஜாதகம் என்பது நட்சத்திர நிலைப்பாட்டை கொண்டு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும், அவர் பிறந்த நேரத்தை துல்லியமாக கொண்டு கணிக்கப்படுவது ஆகும்.

இந்த நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை கொண்டு தான் இந்து முறையில் ஒருவரது ராசி, நட்சத்திரம் போன்றவை குறிக்கப்படுகின்றன.இதை கொண்டு உருவாக்கப்படும் ஜாதகத்திற்கு என தனிப்பட்ட நன்மைகள், கேடுகளும் கூட கூறப்படுகிறது.

இதை வைத்து, இவர்களது வாழ்வில் ஒவ்வொரு காலத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதையும் கூறுகின்றனர். மேலும், குரு பெயர்ச்சி, ராகு கேது பயிற்சி பலன்களும் கூட காலத்திற்கு ஏற்ப கூறப்படுகிறது.

இதில், ராகு கேது என்பது கேடு விளைவிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மையில் ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன? இந்த பெயர்ச்சி எப்படி நிகழும்? என்பது குறித்து இனிக் காணலாம்…

ராகு கேது என்றால் என்ன?

ராகு, கேது என்ற கிரகங்கள் மற்றவையோடு ஒப்பிடுகையில் மிகவும் வலிமையானவையாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் வராது, வேதியியல் படி இவை இரண்டையும் கிரியா ஊக்கி என்று குறிப்பிடுகிறார்கள்.
பிரதிபலிப்பு!

ராகு கேது இரண்டும் எந்த கிரகத்துடன் சேர்கிறதோ, அவற்றின் அடிப்படை குணத்தை பிரதிபலித்து பலன்கள் அளிப்பவை என ஜோதிட நிபுணர்களால் கூறப்படுகிறது. நல்ல கிரகங்களுடன் சேர்ந்தாள், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தாள் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ராகுவும், கேதுவும்.

தற்கொலை சம்பவங்கள், முயற்சிகள் கூட கேது புத்தியில் தான் அதிகம் நடக்கின்றன என்றும், ஜோதிட ஆய்வாளார்கள் குறிப்பிடுகின்றனர்.

அறிவியல்!

அறிவியியல் ரீதியாக பார்க்கையில் ராகு கேதுவை தூசு மண்டலமாக பார்க்கிறார்கள். அதாவது, ஆஸ்ட்ரைட்கள் போல மற்ற கிரகங்களின் துகள்களில் இருந்து வெளிப்படும் தொகுப்பு தான் ராகு, கேது என்று அழைக்கலாம்.

பயணிக்கும் திசை?

ராகு, கேது இந்த இரண்டு கிரகங்களுக்கும் தனிதனி பாதைகள் இல்லை என்றும், இவை என்றும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றன என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக புயல் காற்று வீசும் போது பூமியில் ஒரு பகுதி தூசும், வானில் ஒரு பகுதி தூசும் சுழலும், இதே தான் ராகு கேதுவின் வாகு என்றும் கூறப்படுகிறது.
வால் நட்சத்திரங்கள்!

வால் நட்சத்திரங்களும் கூடதூசுகளின் தொகுப்பு தான். இவற்றில் கார்பைன், கார்பன் மோனாக்சைடு போன்றவை இடம்பெற்றிருக்கும். இவற்றின் மீது ஒளிக் கற்றைகள் படும்போது, அதன் பிரதிபலிப்பால் இவை மின்னுகின்றனர்.

நிரந்தமற்றது!

இந்த மின்னும் தன்மை நிரந்தமற்றது, தோன்றி மறைந்துவிடும். எனவே, வால் நட்சத்திரங்களும் கூட ராகு, கேது குடும்பம் / பிரிவை சேர்ந்தவை என வைத்துக் கொள்ளலாம்.

 

SHARE