ஜிகா வைரசால் பெரியவர்களின் மூளையும் பாதிக்கப்படும் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

245
ஜிகா வைரஸ் மூலம் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் காரணமாக பிறக்கும் குழந்தைகள் தலை சிறிதாகவும், மூளை பாதிக்கப்பட்டும் பிறக்கின்றனர்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதார ஆய்வாளர்களும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நோயால் குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் முதியவர் ஒருவர் வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்படவே பாரீஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக டொக்டர். Guillaume Carteaux என்பவர் கூறியதாவது, ஜிகா வைரசால் ஒருவர் இந்த வகையில் பாதிப்பட்டிருப்பது எனக்கு தெரிந்து இதுதான் முதல் முறை.

அவரது உடலில் உள்ள ஜிகா வைரஸின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று கூறமுடியாது.

பாக்டீரியா அல்லது வைரல் தொற்று காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனினும் meningoencephalitis. என்ற மூளை தொடர்பான நோயுடன் ஜிகா வைரசுக்கு தொடர்பு இருக்கலாம்.

எனவே மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE