டெஸ்ட் போட்டியில் டேவிட் வோர்னர் பங்குபெறுவார் – டெரன் லீமன்

206

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் உடற்தகுதி பெறுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையினை டேவிட் வோர்னர் மற்றும் அவுஸ்திரேலியாவின் தலைமை பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் ஆகிய இருவருமே வெளியிட்டுள்ளனர்.

விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் இறுதி கட்ட போட்டிகளில் வோர்னர் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி போட்டிகளில் வோர்னர் விளையாட மாட்டார் என்ற போதிலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

SHARE