டொனால்டு டிரம்பின் வெற்றி புது சிக்கல்களை உருவாக்கும் –  அரபு பாதுகாப்பு தலைமை

233
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது சிக்கல்களை தோற்றிவிக்கும் என அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே நாகரிகங்களின் மோதலுக்கு டிரம்பின் வெற்றி வழிவகுக்கும் என கூறியுள்ள அரபு பாதுகாப்பு தலைமை,

இஸ்லாமியர்கள் குறித்த அவரது கருத்துகளே அதை வெளிப்படுத்துவதாகவும் ஜெனரல் தமீம் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளை இஸ்லாமியர்கள் வெறுப்பதாக டிரம்ப் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உலகில் யுத்தங்கள் ஏற்பட காரணமாக அமைவது கலாச்சாரமே என அரசியல் விஞ்ஞானி சாமுவேல் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,

ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரியை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெறுவாரானால் சாமுவேல் குறிப்பிட்டுள்ள கலாச்சார மோதல்கள் உருவெடுப்பது உறுதி என்றார்.

மத்திய கிழக்கு பகுதிகளில் குறிப்பாக துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் தனது வணிகத்தை நிலைநாட்ட டிரம்ப் கடுமையாக முனைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் கடுமையான நெருக்கடி காரணமாக அவை எதிலும் டிரம்பால் வெற்றி காண முடியவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த காரணங்களே டிரம்பை இஸ்லாமிய விரோதியாக மாற்றியிருக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

SHARE