டொனால்ட் ட்ரம்ப்பினால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன்! சர்வதேச ரீதியாக சர்ச்சை

142

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐந்து 5 வயது சிறுவன் டலாஸ் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையானது சர்வதேச மட்டத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்து மற்றும் ஈரான் நாடுகளுடன் தொடர்புடைய குடும்பத்தின் சிறுவன், தனது பெற்றோருடன் ஈரானில் இருந்து அமெரிக்க விமானத்தில் வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அங்கு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்த சிறுவனை மீண்டும் தங்களிடம் வழங்குமாறு பெற்றோர் அழுது புலம்பும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் 4 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தனது பிறந்த நாளில் அந்த சிறுவன் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவே இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்த வெள்ளை மாளிகை பேச்சாளர், குறித்த விமான நிலைய பாதுகாப்பாளர்களின் செயற்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என்றால் அவரது வயது, பால் குறித்து சிந்திப்பது முக்கியமான விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE