தக்காளி சாறு குடித்தால் ஆரோக்கியம் கிடைக்கும்!

160

தக்காளியில் பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. தக்காளியில் விட்டமின் A இருப்பதால் உணவில் தினந்தோறும்சேர்த்து வந்தால் கண்பார்வை குறைவு ஏற்படாது.

தக்காளியில் ஆண்டிஆக்சைட்லைகோபெனெ அதிகம் இருப்பதால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், வயிற்றுபகுதியில் புற்றுநோய் உள்ளவர்கள் தக்காளி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

தக்காளியை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் சாறு செய்து சாப்பிடலாம். அது எவ்வாறு செய்வது,

தேவையான பொருட்கள்

தக்காளி – அரை கிலோ.

தண்ணீர் – 2 கப்.

தேன் – தேவைக்கு

லெமன் – தேவைக்கு.

கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை
  • தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி 4 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • இத்துடன் 2 கப் தண்ணீர், தேன், லெமன், உப்பு போட்டுக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  • தக்காளி சாறு தொடர்ந்து குடித்து வந்தால் முகம் பளபளக்கும்.

SHARE