தனுஷ் – ஐஸ்வர்யாவின் மகனாக மறுபிறவி எடுத்த ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

52

 

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா – நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி தங்களது பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன், எதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

நடிகர் தனுஷ் தனது படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனது மகன்களை வழக்கமாக அழைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கேப்டன் மில்லர் இசை வெளியிட்ட விழாவிற்கும் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் அழைத்து வந்திருந்தார்.

தனுஷின் மகன் யாத்ரா
இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவை பார்க்கும் போது அச்சு அசல் அப்படியே தனது தாத்தா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் என பலரும் கூற துவங்கிவிட்டனர்.

யாத்ராவின் அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ரஜினியின் மறுபிறவி போல் இருக்கிறார் யாத்ரா. இளம் வயதில் ரஜினிகாந்த் எப்படி இருந்தாரோ அச்சு அசல் அப்படியே இருக்கிறார் யாத்ரா என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

SHARE