தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேருக்கு சிறைத் தண்டனை

231
பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடல்கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்திருந்த அமெரிக்க கப்பல் ஒன்று நுழைந்துள்ளது.

இந்த கப்பலில் இருந்த 12 இந்தியர்கள், 3 உக்ரைனியர்கள், 14 எஸ்டொனியர்கள் மற்றும் பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் என 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அந்த கப்பலிலிருந்து துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேருக்கும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 6 பேரும், தாங்கள் எந்த தவறும் இழைக்கவில்லை என்று மறுத்துள்ளதோடு, தங்களின் அமெரிக்க முதலாளிகள் தம்மை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த 6 பேரின் பெயர் விவரங்கள்:

1) Nick Dunn, from Ashington, Northumberland.

2) Billy Irving, from Connel, Argyll.

3) Ray Tindall, from Chester.

4) Paul Towers, from Pocklington, East Riding of Yorkshire.

5) John Armstrong, from Wigton, Cumbria.

6) Nicholas Simpson, from Catterick, North Yorkshire.

SHARE