தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கைச் சுவாசம்

184

உபாதைக்குள்ளான நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அப்பலோ மருத்துவமனையில்  கடந்த 10நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு தற்போது செயற்கைச் சுவாசம் மருத்துவர்களால் ஏற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு செயற்கையான முறையில் இயந்திரத்தின் மூலம் சுவாசம் வழங்கப்படுபவர்கள்  5% அல்லது 10%மானவர்களே உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெஞ்சிலேட்டர் சிகிச்சை முறையே தற்போது அவருக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அவரது உடலில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது செட்டிசீமியா கட்டத்தினை அடைந்துள்ளார். இயந்திரத்தில் தான் அவருடைய சுவாசப்பை இயங்கிக்கொண்டிருப்பதாகவும், இயந்திரத்தை நிறுத்தும்போது மரணம் சம்பவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பண வசதிகள் உள்ளவர்கள் இவ்வாறான உபாதைக்குள்ளாகி மருத்துவமனைக்குச் சென்றால் 01,02 மாதங்கள் செயற்கைச் சுவாசத்தில் வைத்திருப்பார்கள்.  20 அல்லது 30 இலட்சம் என மருத்துவமனையால் பணம் அறவிடப்படும். இறுதியில் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனக்கூறிவிடுவார்கள். இவைதான் வழமையாக நடக்கும் விடயம். ஜெயலலிதா ஏற்கனவே இறக்கும் நிலையில் இருப்பதாகவும் தற்போது மருத்துவர்கள் கூறுவதற்கு தயங்குவதாகவும் பல இணைய, அச்சு ஊ டகங்களிலும் செய்திகள் வெளிவந்தமுள்ளன. அவ்வாறு ஜெயலலிதா மரணமடைவாராகவிருந்தால் அவரது தொண்டர்களில் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்து இறப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் மீது கருணைகொண்ட உள்ளங்கள் பலர் பிரார்த்னைகளில் ஈடுபடுகிறார்கள். இறைவன் அருளால் அவர் மீண்டு வந்தால் ஒழிய, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியுடனேயே கண்காணிக்கப்படுகிறார். அவ்வாறு இறைவனின் அருளால் அவர் குணமடைந்து வந்தாலும் இனிவரும் காலங்களில் அரசியலில் செயற்படமுடியாத நிலை உருவாகும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்கவேண்டும் என நாமும் பிரார்த்திப்போம்.

jaya_20160702_350_630

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு நிர்வாகம் யார் தலைமையில் இயங்குகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது. காவிரி தொடர்பாக டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவிற்கு, ஜெயலலிதாதான், அறிவுரைகள் வழங்கி அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு வெளியிட்ட 4வது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிக ஓய்வு அவசியம் சுவாசத்தில் கோளாறு இருந்தால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவது வழக்கம். இதில் பதற்றப்பட எதுவுமில்லை. சளி தொல்லை அதிகமாக இருந்தால்கூட முகத்தில் மாஸ்க் வைத்து செயற்கை சுவாசம் வழங்கத்தான் செய்வார்கள். ஆனால் இவ்வாறு சிகிச்சை பெறும்போது படுக்கையில் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை வரும். இதுபோன்ற சூழ்நிலையில், யார் அரசு பொறுப்புகளையும், உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சி பொறுப்புகளையும் கவனித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இதுகுறித்து என்டிடிவி வெளியிட்டுள்ள ஒரு செய்தி இதுதான்: மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும், முதல்வர் அலுவலகமே நேரடியாக கண்காணித்து வருவதுதான் வழக்கம். ஆறு பேர் அணி முதல்வர் அலுவலகத்தில் மொத்தம் 4 தனிச் செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் மொத்தமுள்ள 54 துறைகளின் முக்கிய பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்கள். இந்த தனிச்செயலர்கள், மாநில தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணனுக்கும், ரிப்போர்ட் அளிப்பார்கள். அரசை வழிநடத்துகிறார்கள் இதுகுறித்து, பெயர் தெரிவிக்க விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த ஆறுபேர் அணிதான், இப்போது, அரசை வழி நடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். இவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

04-1475564091-28-1411909214-sheela-balakrishnan-jaya-600

04-1475564020-sasikala4-600

04-1475563974-jayalalitha-hospitalized234344

SHARE