தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று கூட்டம்.

660

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று வன்னியன் ஹொட்டலில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகின்றது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு முகம்கொடுப்பது, கூட்டமைப்பு கட்சிகள் ஒற்றுமையாக எவ்வாறு பிரசாரங்களை முன்னெடுப்பது பேன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடலின்போது இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை – இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, இன்று மாலை கட்சித் தலைவர்களுக்கிடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஆசன பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

IMG_20150706_101804IMG_20150706_101722IMG_20150706_101843IMG_20150706_102045IMG_20150706_102427IMG_20150706_102528IMG_20150706_102548IMG_20150706_102732IMG_20150706_102822IMG_20150706_102827

SHARE