தமிழரசுக்கட்சி சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் நால்வரையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இரகசிய புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

585

எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் ஆயுத, அரசியல் வழியாக வந்த கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியை மட்டும் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோரை மாத்திரம் வைத்து வழிநடத்துவதற்கான இரகசிய ஆலோசனைகள் ஜனாதிபதியுடன் நடைபெற்று வருவதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அமையப்பெறுகின்ற பட்சத்தில் தமிழரசுக்கட்சி ஒரு வலுவான நிலையை அடையும். இதனூடாக ஆயத கலாச்சாரமற்ற ஒரு கட்சியை நிலைநிறுத்துவதன் ஊடாக அரசாங்கம் நாடளாவிய ரீதியில் வெற்றி காண முடியும் என்பதனையே இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. தற்பொழுது அரசிற்கு நாடுகடந்த தமிழீழ அரசே பெரும் சவாலாக காணப்படுகின்றது. இவர்களை ஓரங்கட்டுவதற்கான வழிமுறைகளை ஆரம்ப கட்ட நிகழ்வாக அரசு அங்கும் நடத்திக்காட்டியுள்ளது.

download (2)download (3)
தமிழரசுக்கட்சியினுடைய சட்டத்திட்டங்களுக்கு மேற்குறிப்பிடப்பட்டோர் ஒத்துழைப்பு வழங்காவிடின் அவர்களுடைய அரசியல் நிலவரம் மாற்றமடைந்து கடைசியில் இவர்களுடைய ஆரம்பம் எவ்வாறு இருந்ததோ அதே நிலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை இலங்கை அரசாங்கம் தற்பொழுது இருந்தே தனது புலனாய்வு நகர்வுகளை நகர்த்துகின்றது. மாகாண சபையை வைத்து கூட்டமைப்பினுடைய அதிகாரங்களை குறைத்துள்ளது. மாகாணசபையிலே சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், போன்றோரினால் சிபாரிசு செய்யப்பட்டு இன்று அமைச்சர்களாக செயற்படுகின்ற வடமாகாணசபை அமைச்சர்கள் அதன் உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்டவர்களுக்கு கௌரவம் வழங்காது தன்னிச்சையாக செயற்பட்டுவருகின்றனர்.

downloadimages

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களை சேர்ப்பதும் பிரிப்பதும் அக்காலகட்டம் தொட்டு கைவந்த கலையாகும். இதனை தமிழ் இனம் என்கின்ற வகையிலும், தமிழ்த்தேசியம் என்கின்ற வகையிலும் கட்சிக்குள் எவ்வாறான முரண்பாடுகள் வந்தாலும் கலந்துரையாடி தீர்வு காணவேண்டுமே அல்லாமல் பிறர் சிரிக்கும் அளவிற்கு தமிழரசுக்கட்சியோ, தமிழ்த்தேசியக்கூட்மைப்போ சென்றுவிடக்கூடாது. அதுவே தமிழ்மக்களின் பலம்.

 

 

 

SHARE