தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.

254

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.

viththi_ltte_03
ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் ஓரளவு திருப்புமுனை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக அமையும். காரணம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நாட்டில் இருக்கின்றது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தற்போது இருக்கும் அரசாங்கம் மீண்டும் அவ்வுறுப்பினர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடலாம். தமிழீழ விடுதலைப் புலிகளில் உள்ளவர்கள் இன்னும் ஜனநாயக வழிக்குத் திரும்பவில்லையென இவ் அரசாங்கம் மார்புதட்டிக் கூறுகின்றது. அதே நேரம் விடுதலைப்புலிகளின் முப்பது வருடகாலப் போர் மௌனிக்கப்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகள் தலையிட்டமையே. தற்பொழுது இத்தேர்தல் காலகட்டத்தில் என்ன நடைபெறுகின்றது தமிழர் தரப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது சர்வதேசம்.

viththi_ltte_01
தென்னிலங்கை அரசியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்தே அரசியல் பேசி வருகின்றார்கள். மைத்திரி, ரணில், சந்திரிக்கா, சரத்பொன்சேகா போன்றவர்கள் தேர்தலுக்காக மட்டும் தமிழ் மக்களுக்கு நல்லவர்களாகக் கட்சி அழிப்பார்கள் தேர்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் அவர்களது சிங்களப் புத்தியைக் காட்டுவார்கள் இதுவே ஐம்பது ஆண்டு காலங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசனம் வழங்கினால் அதிலும் பாரிய சிக்கல்கள் தற்பொழுது எழுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆசனம் வழங்கி விட்டதென சிங்கள இனவாதக் கட்சிகள் கோஷம் எழுப்புவதற்கு வாய்ப்புக்கள் அமையப்பெறும்.
மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய அரசியல் நகர்வின் நிமிர்த்தம் காலப்போக்கில் ஏனைய இனவாதக் கட்சிகள் தலைதூக்குவதுக்கு இடமில்லாது போகும். ஆகவே அடுத்தமுறை நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளை களமிறக்குவதே சிறந்ததொன்றாகும்.
விடுதலைப்புலிகளினுடைய அரசியல் பிரமுகர்கள், முக்கியக் கட்டளைத் தளபதிகள் இன்னமும் சிறைகளில் பலவருடகாலங்களாக இருந்து வருகின்றனர். 2009ம் ஆண்டுக்குப் பின் கைது செய்யப்பட்டவர்களும் இதில் உள்ளடக்கப்படுகின்றனர். விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் இன்னமும் காணாமல் போனோர் பட்டியலிலேயே இருக்கின்றனர். விடுதலைப்புலிகளுக்கு முற்றாக அரசாங்கம் தீர்வு வழங்கியதன் பின்னர் அரசியல் கலத்தில் இறக்கி தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றபொழுது மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள்.
போராளிகளை இணைந்து இக் கட்சியை ஆரம்பித்த முன்னாள் போராளியும், சுடரொளிப் பத்திரிகையின் ஆசிரியருமான வித்தியாதரன் பாராட்டப்படவேண்டியவர். மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியது வித்தியாதரனுடைய கடமையாகும். இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதித்துவ கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டால் வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது உறுதி. இச் சந்தர்ப்பத்தில் ஆழம் பார்த்துக் காலைவிடுவது என்பது தான் சிறந்த வழி.

SHARE