தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோத்தாபய எச்சரிக்கை.

619

gotha-2

 

தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்:

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கையின் நிழல் அரசர் கோத்தாபய அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடத்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கையின் நிழல் அரசரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

TNA

SHARE