தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

304

 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது.

sampanthan_mahindha

இந்த நிலையில் நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அந்தப் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை – இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவ்வாறு நடந்தால் சர்வதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு கூடிய வரவேற்பு அளிக்கப்படும் என கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

மேலும் அந்தப் பதவி அவர்களுக்கு கிடைக்காவிடின் தமிழர்கள் என்பதால் கிடைக்கவில்லை என சர்வதேசத்தில் கருத்துக்களை பரப்பி ஆதரவு பெறவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மறுபக்கம் வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE