தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது! செய்தியாளர் மாநாட்டில் சுமந்திரன்

201

 

தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ்தே தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியி ன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவல கத்தில் நேற்றைய தினம் மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைநடத்தியிருந்தார்.

இதன்போது வலி,வடக்கு உயர் பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி, பலாலி போன்ற பகுதிகள் மக்களிடம் மீளவழங்கப்படாது. எனவும் அவற்றுக்காக மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் சிலர் கூறிவரும் கருத்துக்கள் தொடர்பாகஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுகூறியிருக்கின்றார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். அதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம்.

மக்களுடைய காணிகளுக்கு நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு அவற்றைஅரசாங்கத்திற்கு வழங்க வேண் டும். என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்அங்கீகரிக்காது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்திலும்,ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும் மக்களுடைய தனிப்பட்ட காணிகள் மக்களுக்குமீள வழங்கப்படவேண்டும். வழங்கப்படும். என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். அவர் கூறியதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

இதற்கிடையில் காணிகளைவழங்கமாட்டோம். நஷ்ஈடே வழங்குவோம். என்றெல்லாமல். வேறு சிலர் கூறுவதை பற்றிமக்கள் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான விடயம் மிக மந்தகதியிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அரசியல் கைதிகள் விடயத்தை தினசரி நாங்கள் பேசி கொண்டேஇருக்கிறோம். ஆனால் அதனை தடுப்பதற்காக பலர் தினசரி வேலை செய்து கொண்டேஇருக்கிறார்கள். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ றுப்பினரும்,கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுகூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாங்கள் தினசரி பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆனாலும்217ஆக இருந்த அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு இப்போது 80ஆக உள்ளது.மேலும் 16பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். என எமக்குகூறப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையைதடுக்கவும், முடக்கவும் பலர் தினசரி வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

முல்லைத்தீவில் ஒரு அங்குலம் நிலம் கூட விடுவிக்கப்படவில்லை

வடமாகாணசபை அமர்வில் மாகாணசபை பிரதி அவை தலைவர் முல்லைத்தீவில் மக்களுடையகாணிகள் ஒரு அங்குலம் நிலம் கூட விடுவிக்கப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயத்தில்அக்கறையற்றிருக்கின்றது. என குற்றஞ்சாட்டிய விடயம் தொடர்பாக கேட்டபோது.

அவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கிறார். அவரும் அக்கறையீனமாகவேஇருந்திருக்கிறார். குற்றஞ்சாட்டுபவர்கள். தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள்.என்பதையும் பார்க்கவேண்டும். என்றார் சுமந்திரன் எம்.பி.

புலம்பெயர் நாடுகளில் கூட்டமைப்பு மீது தாக்குதல்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதானதாக்குதல்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது. இவ்வாறான தாக்குதல்கள் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்பாகவே நடக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைதோற்கடிக்கலாம். ஒரு ஆசனம், இரு ஆசனம் இல்லை சகல ஆசனங்களும் எமக்கே என பேசிகொண்டிருந்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகளில் யாழ். மாவட்டத்தில் 5 வீதம் மற்றைய மாவட்டங்களில் 1வீதம் கூட இல்லை.

மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள் என்பதைக் காட்டிலும் அவ்வாறானவர்களை அடியோடுநிராகரித்தார்கள் என்பது தெளிவான செய்தி.அவ்வாறானவர்களின் தூண்டுதல்களால்தான் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி கொடுப்பதைதமிழ் தேசியக் கூட்டமைப்பு வி ரும்பவில்லையா? என கேட்டதற்கு. எந்த அரசாங்கம்ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு அமைச்சு பதவி பெறுவதை வழக்கமாககொண்டவர் டக்ளஸ் தேவானந்தா.

இந்த அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான தேர்தல்நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நின்றிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா.

மேலும் இந்த ஆட்சியை உருவாக்க அதிகம் பங்காற்றியவர்கள்தமிழ் மக்கள். நாம் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க கேட்டோம். எனவே அவருக்குஅமைச்சு பதவி கொடுப்பதானது. தமிழ் மக்களை மலினப்படுத்தும் ஒரு செயல் என்பதைகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மிகதெளிவாகவே கூறியிருக்கின்றார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு , அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே அமையும்என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் அதிகாரப்பகிர்வு, தேர்தல்சீர்திருத்தம், அடிப்படை உரிமைகள், நீதி, நிதி, பொது நிர்வாகம் உள்ளிட்டவிடயங்கள் தமிழ் மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர்நம்பிக்கை வெளியிட்டார்.

முக்கியமாக அதிகாரப் பகிர்வு விடயத்தில் முன்னேற்றகரமான முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

யாழ்.பிரதான வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமைசெய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாகஇருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தவிடயத்தில் ஆரவாரமின்றி அமைதியாக தாம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆராய 6 உப குழுக்கள் மற்றும்வழிகாட்டல் குழு ஆகியன உருவாக்கப்பட்டன.வழிகாட்டல் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர்இரா.சம்பந்தன் மற்றும் நான் உறுப்பினர்களாக உள்ளோம் எனவும் சுமந்திரன்தெரிவித்தார்.

இதனைவிட அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 6 உப குழுக்களிலும்த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.இந்த உபகுழுக்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக தமது அறிக்கையைஅரசியலமைப்பு மறுசீரமைப்புக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன், தேர்தல் சீர்சிருத்தம் தொடர்பிலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில்ஆராயப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள தேர்தல் முறைமைய மாற்றியமைத்து 233நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வகையில் தொகுதி மற்றும் விகிதாசாரகலப்புத் தேர்தல் முறை குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 6 உப குழுக்கள் மற்றும் வழிகாட்டல் குழுக்களில் பேசப்பட்ட சிலமுக்கிய விடயங்களை அடிப்படையாகக் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கானஇடைக்கால அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் வெளிவரும்.

இந்த இடைக்கால அறிக்கை மூலம் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் சாதக, பாதகவிடயங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என சுமந்திரன் சொன்னார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பினராகிய நாங்கள்அதிகம் பேசாமல் அமைதி காத்து வருகிறோம்.

இந்த விடயத்தில் அனைத்துத்தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பையும் பெறவேண்டியுள்ளதே இதற்குக் காரணம்.அனைத்துத் தரப்பினரதும் ஆதரவையும் பெற்றால் மட்டுமே அரசியலமைப்புமறுசீரமைப்பு திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில்நிறைவேற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்என்பதை 6 உப குழுக்களும் வலியுறுத்தியுள்ளன. வழிநடத்தல் குழுவிலும் இதுகுறித்துப் பேசப்பட்டுள்ளது.

முக்கியமாக மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வுஸ்திரமானதாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுமந்திரன் கூறினார்.

இந்த நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் ஊடாகவே அரசியல் தீர்வுஎட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சிங்கள் மக்கள் மத்தியில்துணிகரமாகப் பேசியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று வருமெனதமிழ்க் கூட்டமைப்பினராகிய நாங்கள் கூறினோம். தீர்வு வரும் வராது என்பதற்குஅப்பால் உருப்படியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அதியுச்ச பட்சமுயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம்.

2016 ல் தீர்வு வருமெனச் சொல்லிவிட்டு கைகட்டி நிற்கவில்லை. எதுவுமேசெய்யாமல் கேள்வி எழுப்புபவர்கள் போன்று நாங்கள் இருந்து விடவில்லை எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

SHARE