தமிழ் தேசிய கூட்மைப்பின் 2015ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இறுதி முடிவு எதிர்வரும் 6ம் திகதி வெளியிடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

324

 

தமிழ் தேசிய கூட்மைப்பின் 2015ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இறுதி முடிவு எதிர்வரும் 6ம் திகதி வெளியிடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

images

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வடகிழக்கில் இருந்து தேர்தலுக்கான வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து விண்ணப்பங்களும் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது மாவட்ட மட்டங்களுக்கிடையிலான தலைவர்களுடனான சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்பொழுது மாவட்டங்கள் அடிப்படையிலே கட்சிகளுக்குரிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பான கூடிய வரையிலே தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன. இன்னும் தீர்வுகள் காணப்பட இருக்கின்றன.

பெண் உறுப்பினர்களை அரசியலில் ஈடுபடுத்துவது என்பது கடினமாக இருக்கின்றது. அவர்களுக்கும் நாங்கள் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருக்கின்றோம்.

தென்னக அரசியல் களத்திலே மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அரசியல் களம் இறங்குவதான செய்திகள் பரவுகின்றன.

உண்மையிலே அரசியல் நாகரீகம் அரசியல் விவேகத்தை பார்க்கின்ற பொழுது உலக நாட்டு தலைவர்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது இவ் விடயம் மிகவும் கேலியானதும் விமர்சனத்துக்கும் உரிய விடயமாக இருக்கின்றது.

மைத்திரி ஜனாதிபதி அவர்களினால் கௌரவ உறுப்பினர் என்ற அந்தஸ்து மட்டும்தான் வழங்கப்பட்டது. அதை மிஞ்சியும் மகிந்த ராஜபக்ச மைத்திரி ஜனாதிபதியிடம் கேட்ட போது கடைசியாக சாதாரணதொரு வேட்பாளராக அங்கீகரிப்பது விடயம் தொடர்பாக சிந்திப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றதென அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாற்றத்திற்கான வழி பிறந்திருக்கின்றது: துரைராஜசிங்கம்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாற்றத்திற்கான வழி பிறந்திருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

கிரான் பள்ளத்துச்சேனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வழக்கமாக எதிர்க்கட்சியில் இருந்து அரசியல் செய்தவர்கள் தற்போது இந்த ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு அதன் தாக்கம் கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டதன் காரணமாக அதன் ஆட்சி அமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்கெடுக்க முடியுமா என்ற பல வாதவிவாதங்களுக்குட்பட்டிருந்தன.

எனினும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் எமது மக்கள் எங்களுக்கு குறிப்பிட்ட விடயங்கள் எமது தலைமைத்துவத்திற்கு நாங்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் நாம் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பிரதித் தவிசாளர் பதவிகளையும் எடுத்துக் கொண்டு எங்களுடைய பிரதேச மக்களுக்கு எமது தமிழ் தேசிய அரசியலுக்குச் சமாந்தரமாக அரச நிர்வாகத்திலும் பங்கு கொள்கின்ற விடயத்தையும் நாங்கள் கையிலெடுத்து செயற்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

ஒருவிடயம் கையளிக்கப்படும் போது சரியானவர்களிடம் அது கையளிக்கப்படுமானால் அது சரியான விளைவுகளை எமக்கு ஈட்டித்தரும். எமது மக்கள் தற்போது இருக்கின்ற இந்த நிலையினை இன்னும் பன்மடங்கு விருத்தியாக்க வேண்டிய கடப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

நாம் ஒரு மிகச்சிறந்த பாரம்பரியத்திற்குள்ளே வாழ்கின்றவர்கள். தமிழர்கள் நாம் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டவர்கள். அந்த வரலாற்றை மனதில் வைத்து நாம் வாழ வேண்டும்.

எமது அமைச்சைப் பொருத்த மட்டில் அது பல்வேறு நெருக்கடிகளைக் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது. முன்பு நாம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது புள்ளி விபரங்களுடன் கருத்துக்களைத் தாக்கல் செய்வோம் இவற்றை இவ்வாறு செய்யலாம் என்று அந்தப் பாணியில் தான் தற்போதும் எமது நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேய்ச்சல் தரை பற்றிய விடயங்கள் இங்கு சொல்லப்பட்டன நாம் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டிய அவசியம் உண்டு. நாம் இலட்சக்கணக்கில் கால் நடைகளை வைத்துக் கொண்டு ஹெக்டேயர் கணக்கில் மேய்ச்சல் தரைகளை எதிர்பார்க்கும் காலம் இதுவல்ல

சனத்தொகையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது அதற்கேற்ப விவசாயமும் வளர்கின்றது இதற்கேற்றால் போல் மேய்ச்சல் தரைகளும் வளராது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதில் 25 வீதமான பகுதி காடாக இருக்க வேண்டும்.

அப்போது தான் நாம் இயற்கையைப் பேண முடியும். எமக்கு ஏற்ற விதத்தில் காடுகளை அழித்துக் கொண்டு செல்லாம் என நாம் எண்ணிவிடக் கூடாது. எனவே இதில் கால் நடைகளை எண்ணிக்கையைச் சுருக்கி அதன் பலனைப் இருந்தவாறே பெற வேண்டும் அதற்கு நல்ல கறவை இன கால்நடைகளை வளர்க்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

தற்போது கால்நடைகளை வளர்ப்பதற்கு நிறையவே முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்ற வேண்டும். எனவே நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் நம்முடைய கால் நடை வளர்ப்பு மாற்றம் பெற வேண்டும்.

மேய்ச்சல் தரைப் பிரச்சினை இதுவரை எந்த இடத்திலும் தீர்த்து வைக்கப்படவில்லை. காடுகளில் கால்நடை வளர்ப்பதற்கு சம்பிரதாய பூர்வமான அனுமதி இருக்கின்றது அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது மாவட்டத்தின் நாலாபக்கமும் குடியேற்றம் என்கின்ற பிரச்சினை பேரினவாதிகள் குடியேற்றங்களை இன்றும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அந்த நெருக்கடிகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டு அதற்குரிய அரசியல் வழிமுறைகள் மூலம் அவர்களை தவிர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளிலும் இறங்க வேண்டும்.

தற்போது நாங்கள் ஆட்சியில் பங்கு என்று சொல்லா விட்டாலும் ஆட்சியில் எமது சொல் ஏறும் என்ற நிலைக்கு வந்திருக்கின்றோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று ஒருநிலை முன்பு இருந்தது தற்போது அந்த ஆட்சியை மாற்றி அமைத்தவர்கள் என்கின்ற ரீதியில் எமக்கும் சில பலம் உண்டு அந்தப் பலத்தினை நாங்கள் பயன்படுத்துவோம் அவ்வாறு பயன்படுத்துகின்ற போது இந்த மேய்ச்சல் தரை தொடர்பான விடயங்களிலும் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எனது அமைச்சில் நான் முக்கியமாக கவனத்தில் எடுத்த விடயம் கூட்டுறவுச் சங்கம். ஒரு பொருளைப் பல்வேறாக மாற்றி உற்பத்தித் திறனின் மூலம் அதன் பெறுமதியை அதிகரிக்கின்ற செயற்பாடுகளை இந்த கூட்டுறவு அமைப்பினை வைத்து எமது அமைச்சின் மூலம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம்.

எமது மக்கள் பலதரப்பிலும் உதவிகளைப் பெற்று வந்தார்களே தவிர அதன் பயன்களைப் பெறவில்லை. இப்படியான சூழல் தான் அப்போது இருந்தது. ஆனால் தற்போது அந்த சூழல் இல்லை மாறிவிட்டது. தற்போது ஒரு சாதகமான சூழல் இருக்கின்றது.

எமது மாவட்டம் விவசாயத்தில் பேர் போன மாவட்டம். விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் இதுதான் விவசாயத்தின் பெருமை. நாம் பாடுபட்டு நெல்லை உற்பத்தி செய்து விட்டு ரஹ்மத் அரிசியைத் தான் நாம் உண்கின்றோம். எவ்வாறு எமது நிலை இருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும்.

நாம் உற்பத்தி செய்கின்ற நெல்லினை நாமே அரிசியாக்க வேண்டும். இதற்கான ஒரு நடவடிக்கையையும் மண்டூரில் நாம் முதற்கட்டமான ஏற்படுகள் செய்திருக்கின்றோம். அதற்கெல்லாம் இன்னும் ஒரு முக்கியமான ஒரு நிலைமை நிகழ வேண்டும்.

தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒரு சுமூக நிலை தோன்றியுள்ளது. முன்பெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம் வைத்தால் மூன்று நான்கு தலைகள் தான் தெரியும் மற்றவர்கள் எல்லாம் எங்கோ இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்

அதிகரிகள் வரவே மாட்டார்கள். இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து இருக்க வேண்டும். இந்த தொடர்ச்சியான இருப்பைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் எமது மக்களே.

முழு நாட்டின் செல்வத்தையும் தங்களின் குடும்பங்களுக்குள் வைத்துக் கொண்டிருந்த மிகப் பெரிய ஏகாதிபத்தியவாதியை ஒரு நாளில் இட்ட புள்ளடியுடன் துக்கியெறிந்து விட்டு ஒரு தேசிய அரசை அமைத்தீர்கள்.

அந்த தேசிய அரசில் பல தில்லுமுல்லுக்கள் ஏனெனில் அங்கு பாராளுமன்றத்தின் நிலைமை மாறவில்லை ஆனால் தற்போது ஒரு மாறுதலுக்கான வழி பிறந்திருக்கின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றத்தினைத் தோற்றுவிப்பதற்கான தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. இனி அடுத்த கட்டத்தில் பாராளுமன்றத்தில் நிலைமையைத் தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கின்ற போது எமது பிரசேத்தில் இருந்து செல்கின்றவர்கள் எமது பிரதிநிதிகளாகச் செல்ல வேண்டும். அவர்கள் எங்கள் தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் சொல்லுகின்றவர்களாக இருக்க வேண்டும்.

அப்படியான தலைமை இல்லாமல் அங்கிருக்கின்ற பெரும்பாண்மை தலைவர்களுக்கு கீழ் இருக்கின்ற வெற்றிலை போடுபவர்களாக இருந்தாலும் சரியானை பிடிப்பவர்களாக இருந்தாலும் சரி வேறுவேறு பெயர்களில் வருபவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உங்கள் வாக்குகளைக் கொடுக்கும் போது எமது பலம் குறைந்து விடும், இப்போது நாம் இருக்கின்ற தேசிய அரசு என்கின்ற நிலையும் இல்லாமல் போய்விடும்.

எனவே அவ்வாறான ஒரு தேசிய அரசினை நிறுவுகின்ற போது தான் நாம் தற்போது மேற்கொள்கின்ற விடயங்களை எல்லாம் இன்னும் நண்மை அடையக் கூடிய விதத்தில் செயற்படுத்தப்படும் அந்த எதிர்கால விடயத்தை எமது மக்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE